போனமுறை ரோஹித். இந்தமுறை தோனி. 1 ரன் அடிச்சா போதும் நியூ ரெக்கார்ட் – மாஸ் காட்டவிருக்கும் கோலி

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Kohli

இந்நிலையில் தற்போது தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கிறார்.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் கோலி ஒரு ரன் அடிக்கும் பட்சத்தில் கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை எட்ட உள்ளார். இந்த சாதனையை சர்வதேச அளவில் படைக்கும் ஆறாவது கேப்டன் என்ற பெருமையை அவர் பெற உள்ளார். மேலும் இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டாவது இரண்டாவது டி20 போட்டியின்போது ரோஹித்தின் சாதனையை முறியடித்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

kohli 4

மேலும் இன்று 1 ரன் அடிக்கும்போது 11000 ரன்களை அடித்த இரண்டாவது இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் என்ற பெருமையை பெறவுள்ளார். இதற்குமுன்னர் தோனி இந்திய அணியின் கேப்டனாக 11000 ரன்களை அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement