தொடரும் சோகம். என்னாச்சி கிங் கோலிக்கு. மீண்டும் ஒருமுறை ரசிகர்கள் ஏமாற்றம் – விவரம் இதோ

Kohli-2
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

cup

இதனை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் தற்போது 2-வது நாளாக தொடர்ந்து விளையாடி வருகிறது. நேற்றைய போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது. துவக்க வீரர் நேற்றைய ஆட்டத்தின் போது டக் அவுட் ஆகி வெளியேறினார். நேற்றைய போட்டியின் முடிவில் ரோஹித் 8 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் புஜாராவை விரைவில் இழந்தது. 66 பந்துகளைச் சந்தித்த புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்ததாக களத்திற்கு வந்த கோலி இந்த தொடரில் இரண்டு அரை சதங்களை அடித்து இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை என்பதனால் இந்த போட்டியில் நிச்சயம் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Kohli 1

ஆனால் இன்றைய போட்டியிலும் ஏமாற்றத்தை தந்த கோலி 8 பந்துகளில் சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது இந்த ஆட்டம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. மேலும் 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது அடித்த சதத்திற்கு பிறகு இதுவரை கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

kohli

இந்நிலையில் தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவெளிக்குப்பிறகு வரை 217 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement