ரோஹித்துக்கு கிடைத்த சக்ஸஸ். மீண்டும் கோலி சந்தித்த பெயிலியர் – நேற்றைய போட்டியில் இதை கவனிச்சீங்களா ?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

cup

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும். ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை குவித்துள்ளது. துவக்கவீரர் ரோஹித் சர்மா 57 ரன்களையும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

kohli

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோலியின் மீண்டும் ஒரு சறுக்கலை சந்தித்துள்ளார். அது யாதெனில் டெஸ்ட் போட்டிகளில் சீராக சதத்தை குவித்து வரும் விராட் கோலி கடைசியாக விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும் இருமுறை அரைசதம் கடந்த கோலி அதனை சதமாக மாற்ற தவறிவிட்டார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Rohith 1

ஏற்கனவே கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கோலி இம்முறையும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் ஏமாற்றத்தை அளித்தார். இருப்பினும் கடந்த 2வது போட்டியில் முதல் இனிங்ஸில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த ரோகித் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் வரை 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அதனால் ரோகித் சதம் அடிப்பது மட்டுமின்றி பெரிய ரன் குவிப்பை வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement