எங்களால் தான் முடியல நீங்களாவது ஜெயிச்சிட்டு வாங்க – கோலி தெரிவித்த வாழ்த்து

Kohli-4
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் வரலாறு காணாத வகையில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக இந்திய மகளிர் அணி கிரிக்கெட் விளையாடி வருகிறது.

Womens

- Advertisement -

தற்போதுவரை எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இல்லை. அதனை நனவாக்கும் விதமாக ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது .

இதற்காக பல முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனால் தற்போது இந்திய மகளிர் அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. அதுமட்டுமின்றி கோப்பையை கைப்பற்றும் தீவிரத்துடன் தயாராக இருக்கிறது.
< blockquote class=”twitter-tweet”>

Congratulations to the Indian Women’s team on qualifying for the @T20WorldCup final. We are proud of you girls and wish you all the luck for the finals. 🇮🇳👏 @BCCIWomen

— Virat Kohli (@imVkohli) March 5, 2020

- Advertisement -

இந்நிலையில் இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் ஒன்றினை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் ட்வீட் செய்துள்ளதாவுது :
இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்க்கு வாழ்த்துக்கள் அரையிறுதிப் போட்டியை காண ஆவலாக இருந்தோம்.

இருந்தாலும் இறுதி போட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் விராட் கோலி. கோலியின் இந்த வாழ்த்து பதிவினை ரகர்களும் பகிர்ந்து மகளிர் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இங்கிலந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறி பிறகு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த தோல்விக்கு பிறகு இன்றுவரை அந்த போட்டி குறித்த சோகம் ரசிகர்களையே இருக்கிறது என்பதே உண்மை.

Advertisement