நாளை டாஸில் கோலி வெற்றி பெற்றால் நிச்சயம் இதுதான் முடிவாம். வெளியான தகவல் – நல்ல கதையா இருக்கு பாருங்க

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை 21ம் தேதி வெல்லிங்டன் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

INDvsNZ

- Advertisement -

இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வருவதால் இரு அணிகளும் தொடரை வெல்ல ஆர்வம் காட்டும். அதிலும் குறிப்பாக தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி அதனை தக்க வைத்துக் கொள்ள இந்த தொடரை சிறப்பாக எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

மேலும் நியூசிலாந்து அணி முன்னேற்றம் காண்பதற்காக இந்திய அணியை தோற்கடிக்கும் தீவிரத்தில் தயாராகி வருகிறது. ஏற்கனவே ஒரு நாள் தொடரை அவர்கள் வென்றதால் அதே உத்வேகத்துடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ளனர். அதேபோன்று இந்திய அணியில் இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்களின் கலவையான சிறந்த அணி தற்போது இருப்பதால் நிச்சயம் இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kohli 1

மேலும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பந்துவீச்சில் பலமாக இருக்கும் இந்திய அணி சிறப்பான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது நாளைய போட்டியில் கோலி டாஸ் வென்றால் இந்திய அணி நிச்சயம் பேட்டிங் செய்வது என்றே முடிவுதான் தீர்மானிப்பார். ஏனெனில் இதுவரை 25 முறை டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கோலி அதில் 24 முறை முதலில் பேட்டிங் முடிவை தீர்மானம் செய்துள்ளார்.

Kohli

அதிலும் பலமுறை முதல் இன்னிங்சில் அதிக ரன்களைக் குவித்து இன்னிங்ஸ் வெற்றிகளையும் கோலி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் வீரர் லட்சுமண் கூட டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை ஜெயிக்க வேண்டுமென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்து ரன்களை அதிகமாக குவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement