தோனியை என்றுமே நான் இப்படியே நினைப்பேன். நெகிழ்ந்த விராட் கோலி

Kohli
- Advertisement -

நாளை ஜூலை 7ஆம் தேதி இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான தோனியின் பிறந்தநாள் அவரை கவுரப்படுத்தும் விதமாக ஐ.சி.சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. அது இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியது பல வீரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் என்று தலைப்புடன் icc பகிர்ந்துள்ளது.

அந்த icc வெளியிட்ட வீடியோவில் பேசியுள்ள கோலி எப்பொழுதும் கூலாக இருப்பார். அவர் அமைதியால் கடினமான சூழ்நிலைகளிலும் சரியான முடிவுகளை எடுப்பார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். நான் அணிக்குள் வரும் போது தோனி கேப்டனாக இருந்தார். அவர் என்றைக்குமே என்னுடைய கேப்டனாக இருப்பார். அவருடன் இருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

Kohli

நான் அணியின் வெற்றிக்காக எதையும் செய்வேன் என்று என்னை நம்பி எனக்கு வாய்ப்பு அளித்தார். அதனால் நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறேன். இப்பொழுது தோனி அறிவுரை கேட்டு தான் நடக்கிறேன் என்று கூறி நெகிழ்ச்சியுடன் கோலி கூறினார்.

Advertisement