நல்லா போன நேரத்துல கோலி ஏன் இப்படி பண்ணாரு. மேட்ச் போச்சா ? – பதறும் ரசிகர்கள்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முடித்ததுள்ளது.

Rohith

- Advertisement -

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், கேப்டன் கோலி 38 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான துவக்கத்தை கொடுத்து 9 ஓவர்களில் 89 ரன்கள் குவித்து அசத்தினார்கள். அதன் பின்னர் ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பிறகு மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்காமல் துபேவை இறக்கிவிட்டு தவறு செய்தார். அந்த இடத்திலேயே இந்திய அணியின் ரன் ரேட் சரிவு உண்டாகியது. அதன் பின்னர் அதற்கு அடுத்த ஓவரில் ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இருந்து வெளியேற பின்னர் கோலி நான்காவது வீரராக இறங்கி ஓரளவு சிறப்பாக விளையாடி 38 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 200 ரன்களை அசால்டாக எட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் கோலி செய்த தவறால் தற்போது இந்திய அணி 180 ரன்களை கூட அடிக்க முடியாமல் போனது.

dube

மூன்றாவது வீரராக அவர் இறங்காமல் ஷிவம் துபேவை இறக்கிவிட்டு செய்த தவறால் ரன் ரேட்டில் தொய்வு ஏற்பட்டு தற்போது இந்திய அணி 180 விட குறைவாக ரன்களை அடித்துள்ளது. மேலும் இது போன்ற சிறிய மைதானத்தில் இந்த ரன்களை நியூஸிலாந்து அணி சேசிங் செய்யும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நியூசிலாந்து அணி இலக்கை துரத்த தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement