ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு 30 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை குறித்த கேள்விக்கு பேட்டியளித்த கோலி கூறியதாவது : இன்னும் 30 போட்டிகள் டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் உள்ளன. அந்தப் போட்டிகளில் இந்திய அணிக்கு தேவையான சரியான காம்பினேஷன் வீரர்களை நாங்கள் தேர்வு செய்ய உள்ளோம்.
எனவே இனிவரும் போட்டிகளில் ஆட ஏராளமான வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வாறு பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு அணியில் இடம் கிடைக்காது. எனவே கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கோலி எச்சரிக்கை விடுத்தார்.
ஒவ்வொரு வீரரும் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் அவர் கூறியதற்கு பின்னால் இளம் வீரர்களான பாண்டியா, சைனி, தீபக் சஹர், ராகுல் சாகர் மற்றும் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு எச்சரிக்கையாக இது கருதப்படுகிறது. மேலும் இளம்வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.