ரோஹித்தின் முன்னிலையை விரும்பாத கோலி. ரோஹித்துக்கு கோலி வைத்த செக்

Kohli
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Kohli

- Advertisement -

தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வருவதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர் கேப்டன் கோலிக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க முடிவு செய்தது. ஆனால் தற்போது கோலி வேறு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முழு தொடரிலும் பங்கேற்க உள்ளார் என்று தெரிகிறது. ஏனெனில் உலகக்கோப்பை முடிந்து அணிக்குள் கேப்டன் பிளவு மற்றும் பல்வேறு வகையான மாற்றங்கள் வர உள்ளதால் அவற்றை சரியான முறையில் கணித்து அணியை தயார் செய்ய கோலி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

rohith

கோழியின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் யாதெனில் ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் பயணத்தின்போது ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் தொடர்ந்து ரோஹித் சர்மா ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் கோலி ஓய்வு முடிவை மாற்றி தற்போது மீண்டும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

ind

மேலும், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டால் அதுவும் கோலியின் கேப்டன் பதவிக்கு பாதிப்பாகவே அமையும். இந்த காரணங்களால் கேப்டன் பதவியை இழக்க கூடாது என்று நினைக்கும் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட நினைப்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் கேப்டனாக மாறினால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை கோலியிடம் இல்லை என்பதையே இந்த முடிவு வெளிக்காட்டுகிறது.

Advertisement