டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியில் புதிய துவக்க ஜோடி – கோலி போட்டுள்ள அதிரடி பிளான்

Rohith-1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இனி இந்த டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை குவித்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்களையும், கோலி 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

kohli 1

அதன் பிறகு வந்த ஹர்டிக் பண்டியா 39 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களை அதிரடியாக குவிக்க இந்திய அணி இந்த பெரிய ரன் குவிப்பை எட்டியது. அதன்பிறகு 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 188 ரன்களை மட்டுமே குவிக்க 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மலன் 68 ரன்களையும், பட்லர் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : t20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரிலும் தான் துவக்க வீரராக களம் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : இதற்கு முன்பு நான் பல்வேறு நிலைகளில் களம் இறங்கி விளையாடி உள்ளேன். மிடில் வரிசையில் நல்ல நிலையில் இருக்கிறேன்.

rohith

டி20 போட்டிகளை பொறுத்தவரை இரண்டு சிறந்த வீரர்கள் அதிக பந்துகளை எதிர் கொள்வது நல்லது. எனவே ரோகித் சர்மாவுடன் தொடர்ந்து துவக்க வீரராக இறங்க விரும்புகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடி நல்ல துவக்கத்தை அமைத்துவிட்டால் எதிரணிக்கு பாதிப்புதான். இதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். எங்கள் இருவரில் ஒருவர் களத்தில் இருந்தாலும் மற்ற வீரர்கள் தன்னம்பிக்கை அடைகின்றனர். அவர்கள் சுதந்திரமாக ஆட முடியும் எனவே இது அணிக்கு நல்லதாக அமையும் என்பதால் இதையே தொடரலாம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

rohith

ஐபிஎல் தொடரிலும் அதை தொடர்ந்து உலக கோப்பை தொடரிலும் நான் ரோஹித்துடன் இணைந்து துவக்க வீரராக விளையாடுவேன். இருப்பினும் உலக கோப்பைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்ற காரணத்தினால் அதற்குள் பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது. இந்த ஆட்டத்தில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் விளையாடியது ஒரு நல்ல முடிவு என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.