இளம்வீரரை இறுதிப்போட்டியில் விளையாட வைக்கும் விராட் கோலி – கோலியின் நம்பிக்கைக்குரிய அந்த வீரர் யார் தெரியுமா ?

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த இந்திய வீரர்கள் தற்போது சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

IND

இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியை அணியின் பந்து வீச்சாளர்கள் தேர்வு எப்படி அமையும் என்பதே தற்போது பலரது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பின்னர் முதல் முறையாக இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவரும் தற்போதுதான் இணைந்து விளையாட இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நான்காவதாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியில் இணைக்க மேனேஜ்மென்ட் திட்டம் தீட்டி வருவதாக தெரிகிறது. வழக்கமாக 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஸ்பின்னர்கள் என இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவது வழக்கம். ஆனால் இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சுக்கு மைதானங்கள் ஒத்துழைக்கும் என்பதால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

siraj 2

இப்போது 4-வது வேகப்பந்து வீச்சாளர் விளையாடுவதை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்ஜை அணியில் இணைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் 2 ஸ்பின்னர்கள் நிச்சயம் வேண்டும் என்றால் சிராஜ் அணியில் இடம்பெறும் போது இஷாந்த் ஷர்மா தான் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.

Siraj-3

இஷாந்த் சர்மாவிற்கு முழங்கை காயம் இருப்பதால் அவருக்கு பதிலாக சிராஜை விளையாட வைக்க நினைக்கின்றனர். அது மட்டுமின்றி இந்த தொடரோடு இஷாந்த் சர்மாவுக்கு 33 வயது ஆவதால் சிராஜ் பயிற்சி போட்டியில் சிறப்பாக பந்து வீசினால் நிச்சயம் இசாந்த் சர்மாவிற்கு பதிலாக சிராஜ் இடம் பெறுவார் என்றே தெரிகிறது. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு விராட்கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் பிரஸ் கான்பிரஸ்சில் சிராஜ் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்பது போலவும் ஒரு ஹின்ட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement