அடிக்க வேண்டிய பந்துகளை அடியுங்கள் சீனியர் வீரர் மீது கோபம் கொண்ட கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அடுத்து அதிக அளவு விமர்சனங்களை இந்திய அணி கேப்டன் கோலி எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக நியூசிலாந்து வீரர்கள் களவியூகத்தை நெருக்கமாகக் அமைத்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் பந்து வீசினார்கள்.

Ind-lose

- Advertisement -

இதனை முறியடிக்க நாம் அடித்து ஆட வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேப்டன் கோலி தெரிவித்தார். குறிப்பாக இந்திய அணியின் மூன்றாம் நிலை வீரரான புஜாரா முதல் இன்னிங்சில் 42 பந்துகளை சந்தித்து 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 76 பந்துகளில் சந்தித்து 11 ரன்களும் மொத்தம் 123 பந்துகளில் இரண்டு இன்னிங்ஸ்களில் சேர்த்து 22 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் இருபதுக்கும் குறைவாக இருந்தது.

மேலும் அவர் பல ஓவர்களை தொடர்ந்து மெய்டன் ஆக்கினார். இதேபோன்று தொடர்ந்து அவர் அவர்களின் மறு புறம் இருக்க வேண்டிய வீரர் ரிஸ்க் எடுக்க வேண்டியதாக மாறுகிறது. அதனால் அகர்வால் அடுத்து ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்தார். அதன்பிறகு இடைவேளைக்கு முன்பாக புஜாரா இறுதியில் போல்டாகி வெளியேறினார்.

Pujara

இதனை அடுத்து கோலி இறங்கி கொஞ்சம் பாசிட்டிவாக ஆடினாலும் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் ரஹானேவின் ஆட்டம் மற்றும் அகர்வால் ஆட்டம் மட்டுமே சிறப்பாக இருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறும்போது : பாசிட்டிவான மனநிலையுடன் போட்டியில் பேட்டிங் செய்ய முயற்சி செய்யவேண்டும். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தெளிவான மனநிலை வேண்டும். உள்நாட்டிலும் கூட நிறைய ஷாட்டுகளை ஆட முடியாது என்பது சரிதான்.

Pujara-2

ஆனால் பந்துகளை அவர்கள் ஒரே பாணியில் வீசிக் கொண்டிருக்கும் போது நாம் பாசிட்டிவ்வாக பந்துகளை அடித்தால் மட்டுமே அவர்களது வியூகத்தை உடைக்க முடியும். அதைவிடுத்து பந்துகளை வீணாக தவற விடுவது போட்டியை திருப்பாது. எனவே அவர்களின் திட்டத்தையும் பிட்ச்சின் தன்மையும் அறிந்து திட்டங்களை மாற்றி சற்று ரன்களை குவிக்க வேண்டியது அவசியம் அடுத்த போட்டியில் நிச்சயம் அவர்களது வியூகத்தை உடைத்து ரன்களை குவிக்க ஆயத்தம் ஆக இருக்க வேண்டும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement