ரோஹித் வேண்டாம். துணைக்கேப்டனாக இவரை போடுங்க – பி.சி.சி.ஐ மீட்டிங்கில் பேசிய கோலி

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதன் காரணமாக தற்போது விராட் கோலி பதவி விலகவுள்ள இந்த விடயமே பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் இந்த விவகாரத்தை தீவிரப்படுத்தும் விதமாக விராட் கோலி ரோகித் சர்மாவை ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியதாக ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

rohith

- Advertisement -

அதன்படி வெளியான செய்தியின் படி : பி.சி.சி.ஐ தேர்வாளர்கள் குழுவிடம் பேசிய விராட் கோலி ரோகித் சர்மாவிற்கு 34 வயதாவதால் அவரை ஒரு நாள் போட்டியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரான கேஎல் ராகுலை அணியின் துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ஆதரித்ததாக கூறப்படுகிறது.

அதே போன்று டி20 போட்டிகளில் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்டை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இடையே மோதல் இருக்கிறது என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வரும் நிலையில் விராட் கோலியின் இந்த செயல் ரோஹித் ரசிகர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Rohith

எப்பொழுதுமே ரோகித் சர்மா கேப்டனாக விரும்பாதவர் விராட் கோலி என்பதுபோல சில கருத்துக்களும் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்கால இந்திய அணியை கருத்தில் கொண்டே ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுலையும், டி20 கிரிக்கெட்டில் பண்ட்டையும் துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோலி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போதையை இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துணைக்கேப்டனாக ரோஹித்தும், டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரஹானேவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement