தோனி தோனின்னு இனிமே கத்தாதீங்க. இந்திய அணியின் அடுத்த தோனி இவர்தான் – கோலி அதிரடி பேட்டி

இந்திய அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனிக்கு பதிலாக தற்போது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இந்திய அணியில் செயல்பட்டு வருகிறார். மேலும் சமீபத்திய சில தொடர்களாகவே தோனிக்கு வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தொடர்ந்து விக்கெட் கீப்பராக பண்ட் இந்திய அணியில் செயல்பட்டு வருகிறார்.

Pant

இருப்பினும் பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் திணறிவரும் பண்ட் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவர்மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்தன இருப்பினும் இவருக்கு தொடர்நது வாய்ப்பு கிடைத்தது. அப்படி கிடைத்தும் கீப்பிங்கிலும் மோசமாகவே செயல்பட்டு வருகிறார்.

கடந்த பங்களாதேஷ் தொடரில் கூட இவர் எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி தோனி என்று கத்த ஆரம்பித்து விட்டனர். மேலும் தோனியை மீண்டும் அணிக்கு தேர்வு செய்யுங்கள் என்றும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டனர். இந்நிலையில் இது குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

பண்ட் தவறுகள் செய்யும் பொழுது மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் தோனி தோனி என்று கத்த வேண்டாம் ஏனெனில் அது அவருக்கு மரியாதையாக இருக்காது மேலும் ஒரு இளம் வீரர் நமது அணிக்காக விளையாடி வரும் போது அவரை ஆதரித்தால் அவருடைய திறன் பெருகும் அதனை விடுத்து தோனி தோனி என்று கத்துவதன் மூலம் அவருக்கு அவர்மீது தாழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு அவர் திறன் வெளிப்படாமல் போக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

Pant-2

எனவே நாட்டுக்காக விளையாடும் இளம் வீரர தவறுகள் செய்யும்போது ரசிகர்களாகிய நீங்கள் அவரை புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டும் அவ்வாறு நீங்கள் கொடுக்கும் ஆதரவுதான் அவரை சிறப்பாக செயல்பட வைக்கும். சில தவறுகளால் அவரது திறனை மறைத்து விடாதீர்கள் நிச்சயம் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே அவர் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டாமல் தட்டிக்கொடுங்கள் நிச்சயம் அடுத்த சிறந்த விக்கெட் கீப்பராக மாறுவார் என்று கோலி கூறினார்.