கொல்கத்தா டெஸ்டில் புதிய சாதனை. தயாரான கோலி. யாராலயும் இந்தமுறை தடுக்க முடியாது – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணி நாளை மறுதினம் 22 ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் டிரா செய்தாலே இந்திய அணி இந்த தொடரை வெல்லும் என்றாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று வைட்வாஷ் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறது.

Kohli-3

- Advertisement -

பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்க உள்ள இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் நடைபெற இருக்கும் இவ்வேளையில் சாதனைகளை அசாத்தியமாக முறியடித்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஒரு புதிய சாதனையை படைக்க இருக்கிறார். தன்வசம் ஏகப்பட்ட சாதனைகளை வைத்திருக்கும் கோலி மேலும் பல உலகசாதனைகளை உடைத்து ஒவ்வொன்றாக முறியடித்து கொண்டே வருகிறார்.

அந்த வகையில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோலி புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் அளிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கேப்டனாக 5000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைப்பார். மேலும் கடந்த போட்டியில் தவறவிட்டது போன்று இந்த போட்டியில் நடக்காது இந்த போட்டியில் அவர் இந்த சாதனையை படைப்பார் என்றும் தெரிகிறது.

Kohli 4

மேலும் இந்த சாதனை பட்டியலில் டெஸ்ட் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரரான தென்னாபிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் 8659 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து சில வீரர்கள் இருந்தாலும் 5000 ரன்ங்களை கடந்த பிறகு கோலி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஸ்மித்தின் சாதனையையும் முறியடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement