இன்னும் 1 ரன் போதும் சச்சினின் மிகப்பெரிய சாதனையை தகர்க்க இருக்கும் – விராட் கோலி

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலைப் வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

indvseng

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சச்சினின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 522 இனிங்ஸில் விளையாடிய சச்சின் 23 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது 489 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி 22999 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் மேலும் ஒரு ரன் குவிக்கும் பட்சத்தில் 490 இன்னிங்ஸ்களில் 23000 ரன்களை கடந்து சச்சின் சாதனையை தகர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kohli century

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வரும் விராட் கோலி இந்த தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே அரைசதம் கடந்துள்ள அவர் இந்த 4 ஆவது போட்டியின் மூலம் மீண்டும் பார்மிற்கு திரும்பவும், சதம் அடிக்கவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement