இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபகாலமாகவே டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தடுமாறிவரும் வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடர் அவருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதிபெறாது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நிச்சயம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஜாராவை முந்த காத்திருக்கும் விராட் கோலி :
இதன் காரணமாக இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆஸ்திரேலியா தொடரில் 33 ரன்களை விராட் கோலி அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாராவை தாண்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அந்த வகையில் புஜாரா இதுவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2074 ரன்களை குவித்துள்ளார். அதேவேளையில் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 2042 ரன்கள் அடித்துள்ளார்.
புஜாரா 24 போட்டிகளில் 2074 ரன்கள் அடித்துள்ள வேளையில் விராட் கோலி 25 போட்டிகளில் 47 ரன்கள் சராசரியுடன் 2042 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் 8 சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்துள்ளார். எப்பொழுதுமே அந்த அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ள வேளையில் இந்த தொடரிலும் அவர் அசத்தலாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 3630 ரன்களுடன் முதலிடத்திலும், விவிஎஸ் லட்சுமணன் 2434 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ராகுல் டிராவிட் 2143 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் வேளையில் தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் புஜாராவை விராட் கோலி பின்னுக்கு தள்ள காத்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் புஜாராவும் இருக்கார் – ஆனா புது அவதாரம் எடுத்திருக்கார்
ஏற்கனவே இந்த தொடரில் விளையாட இருக்கும் விராட் கோலி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில் : நிச்சயம் தற்போது மோசமான பார்மில் இருக்கும் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அசத்தி மிகச் சிறப்பான பார்மிற்கு திரும்புவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



