கெயிலை வித்தியாசமான பாணியில் வழியனுப்பிய கோலி – அந்த செய்கைக்கு அர்த்தம் இதுதான்

Gayle-2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது அதன்படி முதலில் விளையாடிய மழையின் காரணமாக போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

- Advertisement -

அந்த 35 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 240 ரன்கள் குவித்தது. அதன் பிறகு விளையாடிய இந்திய அணி விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டி.எல்.எஸ் முறைப்படி 32.3 ஓவர்களில் 256 ரன்கள் குவித்து வெற்றி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கு அளிக்கப்பட்டது.

நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கெயில் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டம் இழந்ததும் அவர் ஓய்வு பெற்றுவிட்டதாக நினைத்து இந்திய வீரர்கள் அனைவரும் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து வழிஅனுப்பினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் கெயில் இணைந்து வித்தியாசமான செய்கை ஒன்றை செய்தனர். இந்த செய்கை மைதானத்தில் இருந்த ரசிகர்களை கவர்ந்தது. கோலி நேற்று கெயிலை உற்சாகமாக வழியனுப்ப அந்த செய்கையை மைதானத்தில் செய்தார். அவரின் இந்தச் செய்கைக்கு காரணம் யாதெனில்

Gayle1

கோலி மற்றும் கெயில் இருவரும் மைதானத்திற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் வயது வித்தியாசத்தை கடந்து சிறந்த நண்பர்களாக உள்ளனர். அவர்கள் செய்த அந்த செய்கைக்கு அர்த்தம் யாதெனில் கரீபியன் பாணியில் சாம்பியன் என்று கெயில் அந்த செய்கையை செய்வார். கோலியும் அதனை ஒத்துக் கொண்டு நீங்கள் உண்மையில் சாம்பியன் தான் என்பது போல அடிக்கடி அவர்கள் மைதானத்தில் இவ்வாறு செய்வார்கள். அதனையே நேற்று கோலி கெயிலிடம் கூறி வழியனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement