ராகுல் வேண்டாம். ஓப்பனராக வேறு ஒருவரை களமிறக்க கோலி போட்ட – மாஸ்டர் பிளான்

Rahul-1

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி (இன்று) ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

Rahul

இந்த தொடரில் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க மாட்டார் அவருக்கு பதிலாக மற்றொரு துவக்க வீரர் கோலி தயார் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி ஏற்கனவே ரோகித் மற்றும் தவான் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கும் போது ஒரு வலதுகை வீரர் மற்றும் ஒரு இடது கை வீரர் என்ற பார்மட்டை இந்திய அணி கடைபிடித்து வந்தது. அதன்படி இன்றைய போட்டியிலும் அதே போன்று இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் பின்வரிசையில் தொடர்ந்து சொதப்பி வரும் விக்கெட் கீப்பர் பண்டை துவக்க வீரராக களமிறக்கி அவரது ஆட்டத்தை சோதிக்க கோலி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

pant 1

மேலும் துவக்க வீரராக பண்ட் களமிறங்கும் போது எந்தவித பதட்டமும் இன்றி அதிரடியாக ஆடுவார் என்று கோலி எதிர்பார்க்கிறார். எனவே அவரை துவக்க வீரராக களமிறக்கி இன்று அதிரடியாக விளையாட வைக்க கோலி மாஸ்டர் பிளான் போட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் துவக்க வீரராக யார் விளையாடுவார்கள் என்று இரவு 7 மணிக்கு தெரிந்துவிடும்.

- Advertisement -