டெஸ்ட் சாம்பியன்ஷிப் : எங்களின் மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – விராட் கோலி ஓபன்டாக்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. ஐந்து நாட்கள் கொண்ட இந்த இறுதிப் போட்டியானது மழையின் காரணமாக இரண்டு நாட்கள் நடைபெறாமல் போனது. நேற்று 6-வது நாளில் போட்டி முடிவுக்கு வந்தது.

WTC

- Advertisement -

இந்த போட்டியில் நிச்சயம் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் அசத்தலான பந்து வீச்சின் மூலம் இந்திய அணி 170 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் சுருட்டினர். அதன் பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பெரிய அளவு விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. ஏனெனில் எளிதாக டிரா செய்திருக்க வேண்டிய போட்டியை இந்திய அணி தோற்றது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் :

kohli 1

போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்டது. பின்பு இரண்டாவது நாளில் ஆட்டம் தொடங்கியபோது நாங்கள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தோம். ஆனால் வானிலை காரணமாக அவ்வப்போது ஆட்டம் பாதிக்கப்பட்டதால் எங்களால் விரைவாக ரன்களை சேர்க்க முடியவில்லை. முழுவதுமாக போட்டி நடந்து இருந்தால் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்திருப்போம் என்று கோலி கூறியுள்ளார்.

IND

மேலும் இந்திய அணியில் இதுபோன்ற மைதானங்களில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் அவசியம். ஆனால் இப்போது இருக்கும் அணியை வைத்து நாங்கள் பல்வேறு நாடுகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். அதனால் எங்களுடைய பேட்டிங்கின் பலமும் அதிகரித்திருக்கிறது. 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது சரியான முடிவுதான் என்றும் கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement