திறமையான பவுலிங் மூலம் என்னை கஷ்டப்படுத்தியவர் இவர்தான். இவர் பந்துவீசினால் நான் முட்டாள் ஆகிடுவேன் – கோலி ஓபன் டாக்

விராட் கோலி தற்காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் அவர் பேட்டிங்கும் அவ்வாறுதான் இருக்கும். அவர் அடித்த ஆயிரக்கணக்கான ரன்களும் அவரது பெயரைச் சொல்லும். தற்போது வரை 73 சதங்கள் விளாசியுள்ளார். அவருக்கு 31 வயது மட்டுமே ஆகிறது. ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களும் டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களை விளாசியுள்ளார். எந்த வகையான பந்து வீச்சையும் எளிதாக ஆடக்கூடியதில் வல்லவர்.

kohli 2

இந்நிலையில் தன்னையே நிலைகுலைய வைத்து, ஒரு முட்டாளை போல உணர வைத்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் பற்றி பேசியுள்ளார் விராட் கோலி. இஎஸ்பிஎன்கிரின்போ இணையதளத்திற்கு இது குறித்து அவர் பேசினார். மேலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் : 2009ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் அவரது பந்து வீச்சினால் என்னை முட்டாள் போல் உணர வைத்தார் வார்னே., அவரது பந்து வீச்சில் அவ்வளவு கடினமாக இருந்தது. இந்த போட்டி முடிந்த பின்னர் என்னிடம் வந்த ஷேன் வார்னே பேட்டிங் செய்யும்போது யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று தெரிவித்தார்.

Warne 1

எப்போதும்போல மற்றவர்களின் அறிவுரை ஏற்காதது போலவே இவர் பேசியதையும் நான் ஏற்கவில்லை. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவரிடம் நான் எனது விக்கெட்டை இழக்கவில்லை. ஆனால் அவரது பந்துவீச்சில் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை என்பது வருத்தம்தான் என்று கூறினார் விராட் கோலி.

- Advertisement -

அதே நேரத்தில் விராட் கோலி குறித்து பேசிய ஷேன் வார்னே கோலி போன்ற திறமையான பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளத்தின் இருபக்கமும் பந்துவீச கூடாது. அதே நேரத்தில் நேராக பந்து வீசினாலும் அவர் அனாசயமாக விளாசித் தள்ளுவார் இதனால் அவருக்கு பந்து வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் வார்னே.

Warne

கோலியின் இந்த கருத்திற்கு கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் கோரோனோ ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டிலேயே முடங்கியுள்ளதால் தினமும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களை சமூகவலைத்தளம் மூலம் அவர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.