மே.இ தீவுகள் அணிக்கு எதிரான வெற்றிக்கு முழுக்காரணம் இதுவே – கோலி மகிழ்ச்சி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

Ind-vs-Wi

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பொல்லார்ட் 49 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பாக அறிமுக வீரரான சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பிறகு 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 26 ரன்கள் அடித்தார் ஆட்ட நாயகனாக அறிமுக வீரர் சைனி தேர்வானார்.

Saini

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி கூறியதாவது : இன்று இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகியவை துவக்கத்திலிருந்து சிறப்பாக அமைந்தது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதமானது என்பது நிச்சயமாக கிடையாது. இருப்பினும் நாங்கள் போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

Ind

மைதானத்தில் மழை பெய்து இருக்கும் போது சரியாக மூடி வைக்கவில்லை என்று நினைக்கிறேன் அதனால் மைதானம் மந்தமாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக விளையாட ஆரம்பிக்க நினைத்தார்கள். ஆனால் எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சும், பீல்டிங்குமே வெற்றிக்கு காரணம் என்று கோலி கூறினார்.

Advertisement