இது எனக்கு கிடைத்த வாய்ப்பு. வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் – கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

kohli 1

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்த மைதானத்திற்கு பேட்டிங் செய்ய சென்ற போது சிறப்பாக இருந்தது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும்போது அது கொஞ்சம் கடினமாக இருந்திருக்கும். ஏனெனில் மழை பெய்ததால் அவர்களுக்கு அது கை கொடுக்காமல் போயிருக்கலாம். 270 ரன்களுக்கு மேல் எவ்வளவு அடித்தாலும் அது சவாலான இலக்காக இருக்கும் என்று நினைத்தோம். அதேபோல் போதுமான ரன்கள் கிடைத்தன.

bhuvi

மேலும் ஷிகர் தவான் மற்றும் ரோகித் பெரிய இன்னிங்ஸ் ஆட வில்லை என்றால் டாப் 3 யில் யாராவது ஒருவர் நின்று ஆட வேண்டும். எனவே இம்முறை எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் நான் நின்று விளையாடினேன். அதன் மூலம் சிறப்பான சதம் அடிக்க முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த போட்டியை எனக்கு கிடைத்த வாய்ப்பாக நான் நினைக்கிறேன் என்று கோலி கூறினார்.

Advertisement