தெ.ஆ அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் கேப்டன் கோலி கூறியவை இவைதான் – விவரம் இதோ

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

Kohli 1

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். மேலும் இந்த போட்டி முடிந்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் வெற்றி குறித்து அவர் கூறியதாவது : அணிக்காக சிறப்பாக விளையாடுவது எப்பொழுதுமே ஒரு நல்ல உணர்வைத் தரும். மேலும் இந்த மைதானம் அற்புதமாக இருந்தது.

பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்களை சற்று சிறப்பாகவே நாங்கள் எதிர்கொண்டோம். மேலும் இளம் வீரர்கள் இந்த போட்டியில் சவாலான சூழ்நிலைகளில் அவர்களது திறமையை காண்பித்தார்கள். அவர்கள் தற்போது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் வருங்காலத்திலும் அவர்களிடம் இருந்து இந்த திறமையான ஆட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். இளம்வீரர்களின் திறமையான செயல்பாடே இந்த வெற்றிக்கு காரணம்.

Jadeja

மேலும் அவர்களின் இந்த திறன் இந்திய அணிக்கு வலு சேர்க்கும். இனிவரும் போட்டிகளிலும் அவர்கள் தொடர்ந்து இதே சரியான வழியில் பயணிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த போட்டியில் நான் ரன் குவித்தது பற்றி தனியாக எதுவும் நினைக்கவில்லை. இந்திய அணியின் வெற்றிக்காக நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறேன் என்று கோலி கூறி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement