இவர்கள் இருக்கும்வரை எப்போதும் வெற்றிதான். நியூசி அணிக்கு எதிரான வெற்றி குறித்து – கோலி பெருமிதம்

Kohli-2
- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று ஆக்லாந்து மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

IndvsNz

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும் குவித்தனர். அதன்பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஐயர் 58 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ராகுல் 56 ரன்களையும், கோலி 45 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றியை ஆரம்பத்திலேயே 99 ரன்கள் பாட்னர்ஷிப் மூலம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது :

Rahul

இரண்டு நாட்களுக்கு முன் இங்கு வந்து இதுபோன்ற ஒரு ஆட்டத்தை விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையிலேயே இது ஒரு சிறப்பான தருணமாக மாறியுள்ளது. இந்த மைதானத்தில் 80 சதவீத ரசிகர்கள் எங்கள் அணிக்காக ஆதரவளித்து எங்கள் பின்னால் நின்றனர். அவர்களின் இந்த ஆதரவே இதுபோன்ற 200+ ரன்கள் இலக்கு சேசிங் செய்ய ஒரு ஊக்கத்தை கொடுத்தது. நாங்கள் எந்தவித காரணத்தையும் கூற விரும்பவில்லை. வெற்றி பெற மட்டுமே நினைத்து அதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி விளையாடினோம்.

Iyer-1

இன்றைய போட்டி அதன்படி சிறப்பாக அமைந்தது. கடந்த ஒரு வருடமாக டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் யார் ஒருவர் மீதும் கடிந்து கொள்ள முடியாது. ஏனெனில் மைதானத்தின் தன்மை எவ்வாறு இருந்தது. 230 வரை நாங்கள் ஒரு கட்டத்தில் எதிர்பார்த்தோம். ஆனால் அதிலிருந்து நியூசிலாந்து அணியை 210 க்குள் வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement