Virat Kohli : சிறந்த ஒரு நாள் வீரர் மற்றும் நம்பர் 1 பவுலர் இருக்கும்வரை இந்திய அணிக்கு வெற்றிதான் – கோலி பேட்டி

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச

Kohli
- Advertisement -

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

Ind vs ban 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரோகித் சர்மா 104 ரன்கள், ராகுல் 77 ரன்கள் குவித்தனர்.

பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Rohith

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த தொடர் முழுவதும் பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடி உள்ளது. கடைசி வரை அவர்கள் போட்டியில் வெற்றிபெறும் உணர்வோடு விளையாடுகின்றனர். இந்த போட்டியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் ஒரு போட்டி மீதம் எங்களுக்கு இருக்கிறது மேலும் நாங்கள் தற்போது அரையிறுதி எதிர்நோக்கி உள்ளோம்.

Bumrah

ஹர்டிக் பாண்டியா இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறார். பந்துவீச்சில் முன்னேற்றம் அடைந்து ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். அவருடைய முன்னேற்றம் அணிக்கு உதவியாக இருக்கும் அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.ரோஹித் சிறந்த ஒரு நாள் வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார். பும்ரா சிறப்பாக பந்துவீசி வருகிறார் அவர் நம்பர் ஒன் பவுலர் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார் என்று கோலி கூறினார்.

Advertisement