கங்குலி நினைத்ததை நாங்கள் தொடர்கிறோம் அதுவே எங்களின் வெற்றிக்கு காரணம் – கோலி பேட்டி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை தோற்கடித்தது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

ind 1

இந்த போட்டி முடிந்து பேசிய கேப்டன் கோலி கூறியதாவது : வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியில் இல்லை என்று நினைத்தால் அது ஒரு தவறான விடயமாகும். தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதை பார்த்தால் அவர்கள் எந்த நாட்டிலும் எந்த மைதானத்திலும் விக்கெட்டுகளைக் எடுக்கும் திறமை உள்ளவர்களாக தெரிகின்றனர்.

மேலும் அணியில் இருக்கும் அனைத்தும் வீரர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதேபோல் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகின்றனர். எங்கள் அணியில் உள்ள அனைவரும் இதுபோன்று ஈடுபாடு காட்டுவது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே இந்த தொடரின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர்.

மேலும் வீரர்கள் மைதானத்தில் எதிரணியை வீழ்த்த தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த நினைக்கின்றனர். இதனை கங்குலி அனைத்து அணி நினைத்து அதனை தொடங்கியது அதனை நாங்கள் இப்போது பின் தொடர்ந்து வருகிறோம். கடந்த நான்காண்டுகளாக எங்களது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இந்த வெற்றியை நாங்கள் அனுபவிக்கின்றோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -