என் வாழ்நாளில் மறக்க முடியாத தொடர் இதுதான். 2008 ஆம் ஆண்டு தொடரை நினைவு கூர்ந்த – கோலி

Kohli-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் தற்போது கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை வகித்து அந்த கோப்பையை கைப்பற்றி அசத்தினார். கடந்த 20088 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர் குறித்து அவர் பல விடையங்களை தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

Kohli-3

- Advertisement -

அதன்படி தற்போது வரும் 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடக்க விருக்கும் இந்த ஆண்டின் டி20 உலக கோப்பை தொடர் குறித்து அவர் பேசியுள்ளார். 2008 ஆம் ஆண்டு தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனான வில்லியம்சன் அந்த தொடரில் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தினார் என்றும் கோலி கூறினார்.

மேலும் தற்போது கிரிக்கெட் உலகை கலக்கி வரும் ஜடேஜா, டிரென்ட் போல்ட் மற்றும் டிம் சவுதி ஆகியோர் 2008 ஆம் ஆண்டு அந்த உலக கோப்பையில் விளையாடியவர்கள் என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும் தற்போது வெளியாகியுள்ள உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு கோலி வாழ்த்துக்களை கூறி இது மட்டுமன்றி வெற்றி பெறவும் தனது அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

Jadeja 1

மேலும் உலக கோப்பை குறித்து பேசிய அவர் : என் வாழ்நாளில் மிகவும் மறக்கமுடியாத தொடர் என்றால் அது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்த 2008ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர் தான். அந்த பயணத்தில் நான் ஜடேஜா, சவுதி, போல்ட் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் பங்கேற்றனர் என்ற ஞாபகம் என்னிடம் உள்ளது.

Williamson

மேலும் மற்றவர்களிடமிருந்து எங்களது ஆட்டம் தனித்துவமாக இருந்ததாகவும் தற்போது நாங்கள் அனைவரும் சாதித்து வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் அந்த தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது என்றும் தற்போது உள்ள வீரர்களில் ஜடேஜா, வில்லியம்சன்,சவூதி மற்றும் போல்ட் ஆகியோரை மறக்க முடியாது என்றும் அவர்களது ஆட்டம் தனித்துவமானது என்றும் கோலி தனது நினைவுகளை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement