இந்த பழக்கத்தை கைவிட்ட போதுதான் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது – கோலி வெளிப்படை

Kohli-1
- Advertisement -

கோலி தான் ஏன் அசைவ உணவு பழக்கவழக்கத்தில் இருந்து சைவ உணவிற்கு மாறினேன் என விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் நல்ல உடற்கட்டும், உடல் தகுதியுடனும் இருக்கும் நபர் இந்திய கேப்டன் விராட் கோலி சமீபத்தில்கூட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. கிரிக்கெட் உலகில் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் ஒரே வீரர் விராட் கோலிதான் என்று அதற்கு அவர் கடுமையான பயிற்சிகளை செய்கிறார் என்றும் கூறியிருந்தார்.

Kohli 3

- Advertisement -

இந்நிலையில், தான் ஏன் சமீபத்தில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிய விராட் கோலி தனது உணவு பழக்கவழக்கத்தை பற்றியும் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது : 2018 ஆம் ஆண்டிற்கு முன் நான் அசைவ உணவுகளை சேர்த்துக் கொண்டு வந்தேன்.

இங்கிலாந்து தொடருக்கு பின் அசைவத்தில் இருந்து சைவ உணவிற்கு மாறினேன். தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தொடரின் போது எனது கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்ததில் எனது உடல் அதிகமாக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்தது தெரியவந்தது. மேலும் உடல் அமிலத்தன்மை வாய்ந்து காணப்பட்டது.

கால்சியம் மக்னீசியம் எடுத்தும் என் உடலால் சரியாக இயங்க முடியவில்லை. இதன் காரணமாக எலும்பில் இருந்த கால்சியத்தை எனது உடல் எடுத்துக்கொண்டது. எலும்புகள் பலவீனமாக, இதன் காரணமாக இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பாதியில் அசைவம் உண்பதை நிறுத்தினேன். பின்னர் யூரிக் அமிலம் சுரப்பதை நிறுத்த முடிந்தது. உடலின் அமிலத் தன்மையும் குறைந்து.

- Advertisement -

தற்போது வரை சைவ உணவிற்கு மாறி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. என் வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவு இதுவாகும். காலையில் எழும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு ஆட்டத்தின் சோர்விலிருந்து விரைவாக என்னால் மீழமுடிகிறது. ஒரு வாரத்திற்கு மூன்று ஆட்டங்களில் விளையாடினால் கூட என்னால் மீண்டும் அடுத்த இரண்டு ஆட்டங்களில் ஆட முடியும்.

Kohli-4

ஒரு டெஸ்ட் ஆட்டம் முடிந்தவுடன் ஒரே நாளில் அதிலிருந்து மீண்டு வர முடியும். அதைவிடவும் தற்போது நல்லவிதமாக உணருகிறேன். நான் முன்னதாகவே சைவ உணவு பழக்கத்தில் மாறியிருக்க வேண்டும். இந்த பழக்கம் எனது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்று உடலும் லேசாகி விட்டது என்று கூறியுள்ளார் விராட் கோலி.

Advertisement