விஹாரியை நீக்கிவிட்டு உமேஷ் யாதவை அணியில் சேர்க்க இதுவே காரணம் – கோலி பேட்டி

Vihari-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்கியுள்ளது.

Umesh

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி தற்போது உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த போட்டியில் இளம் வீரரான விகாரி அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ் போடப்பட்ட பிறகு அணியின் மாற்றம் குறித்து பேசிய கோலி கூறியதாவது : இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சை விட வேகப்பந்து வீச்சு அதிகம் ஒத்துழைக்கும் என்ற காரணத்தினால் விஹாரி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் சேர்த்திருக்கிறோம்.

Umesh

மேலும் ஏற்கனவே ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியில் விஹாரியை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க வேண்டியதாயிற்று. இந்த அனைத்து முடிவுகளும் மைதானத்தில் தன்மை அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும் கோலி கூறி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement