கங்குலியிடம் நிச்சயம் சொல்வேன். இனி டெஸ்ட் போட்டிகள் நடக்கக்கூடாது – கோலி அதிரடி

Ganguly
- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தற்போது கைப்பற்றியுள்ளது. அடுத்து வங்கதேச அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிருக்கிறது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி பி.சி.சி.ஐக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களிலும் டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டாம். இந்தியாவில் சிறந்த 5 இடங்களை தேர்வு செய்து அங்கு டெஸ்ட் போட்டி நடத்தினால் நல்லது. இந்த கருத்தை நான் பலமுறை பி.சி.சி.ஐ யிடம் கூறி விட்டேன்.

ஏனெனில் வெளி நாட்டு அணிகளுக்கு இந்தியாவைப் பற்றிய புரிதல் இருக்காது. அதனால் டி20 ஒருநாள் போட்டியை அனைத்து மைதானங்களிலும் நடத்தலாம். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை குறிப்பிட்ட இந்த மைதானங்களை போட்டி நடத்தினால் தான் அவர்களுக்கும் அது சாதகமாக இருக்கும். எதிரணி நமக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடினால் தான் போட்டியில் சுவாரசியம் இருக்கும்.

Ind

மேலும் போட்டியில் சவால் இருந்தால்தான் உள்ளூர் மக்களும் போட்டியை நேரில் காண அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். மேலும் இதனை நான் புதிதாக தலைமை ஏற்றிருக்கும் புதிய தலைவரான கங்குலிக்கும் தெரியப்படுத்துவேன். அவர் புதிய தலைவராக பதவியேற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement