என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மணி நேரத்தில் எல்லாமே மாறிடுச்சு – கோலி வேதனை

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களை குவிக்க அதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் பின்னர் 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தனர். எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வகையில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கான ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியை பெற்றது மட்டுமின்றி தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான இந்த மோசமான தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் :

வெறும் வார்த்தைகளால் இந்த உணர்வை என்னால் வெளிப்படுத்த முடியாது அப்படி வெளிப்படுத்துவது மிகவும் கஷ்டம். 60 ரன்கள் முன்னிலையில் களமிறங்கிய நாங்கள் அப்படியே சரிந்து விட்டோம். இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு விளையாடிய ஒரு சந்தர்ப்பத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் வீணடித்து விட்டோம். இந்த தருணம் மிகுந்த வேதனையாக உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலுமே இன்னும் மாற்றம் மற்றும் முன்னேற்றம் ஆகியவை தேவைப்படுகிறது.

Rahane

இந்த போட்டியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி உள்ளதை உணர்கிறோம். இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த போட்டியில் நம் வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது என்று விராட் கோலி தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement