தொடக்கமே இப்படி அமையக்கூடாது. இது வீரர்களுக்கு ஆபத்தானது – சலிப்படைந்த கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கயானாவில் நடந்தது. இந்த போட்டி மழை பாதிப்பு காரணமாக போட்டி 34 ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்பிறகும் மழை குறுக்கிட்டதால் முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது.

rain

- Advertisement -

நேற்றைய போட்டி கைவிடப்பட்டது தொடர்ந்து பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : தொடரின் தொடக்கத்திலேயே போட்டி நிற்பது நல்லது கிடையாது. ஒன்று போட்டியினை முழுமையாக அட வேண்டும் இல்லை என்றால் ஆரம்பத்திலேயே நிறுத்திட வேண்டும்.

ஏனென்றால் இதுபோன்ற போட்டிகளில் வீரர்கள் காயம் ஏற்பட்டால் அது அவர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். வீரர்கள் பிட்டாகவும், நல்ல திறனோடும் இருக்க வேண்டும். அதுவும் வெஸ்ட் இண்டீஸ் உள்ள மைதானங்களில் உண்மையிலேயே அவர்களுடைய திறமையையும் உடற்தகுதிகளையும் சோதிக்கும்.

Rain-1

ஏனெனில் இங்குள்ள மைதானங்களில் நல்ல வேகத்தையும் கூடுதல் உயரத்தையும் கொண்டிருக்கும் எனவே போட்டிகள் முழுமையாக நடை பெறுவது நல்லது இருப்பினும் இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று கோலி கூறினார்.

Advertisement