நேற்றைய போட்டிக்கு முன்னர் டிவில்லியர்ஸ்ஸிடம் பேசினேன். எனது சிறப்பான ஆட்டத்திற்கு அதுவே காரணம் – கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் கடைசியாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன அவர் டி20 தொடரின் முதல் போட்டியிலும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவரது பேட்டிங் பார்ம் குறித்தும் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

ishan 1

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இந்திய அணி வெற்றி பெறும் வரை கடைசி வரை களத்தில் நின்ற கோலி இறுதியாக ஒரு சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு பேசிய விராட் கோலி : அடிப்படையிலிருந்து நான் போகஸ்ஸை ஷிப்ட் செய்ய வேண்டியிருந்தது. அணிக்காக விளையாடுவதை மிகப் பெருமையாக கருதுகிறேன். தற்போது பந்தை கூர்ந்து கவனித்து வருகிறேன். அணி நிர்வாகம் என்னிடம் சில விஷயங்கள் குறித்து பேசி இருந்தது. அனுஷ்காவும் இந்த போட்டியை எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை கூறி நான் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தார்.

மேலும் இந்த ஆட்டத்திற்கு முன்னதாக நான் ஏபி டிவிலியர்ஸ் இடம் பேசியிருந்தேன். அவர் எனக்கு சில அட்வைஸ்களை கொடுத்தார். “முக்கியமாக பந்தை வாட்ச் பண்ணு” என்று அவர் சொன்னார். அதன்படி இந்த போட்டியில் நான் பந்தை கவனமாக பார்த்து விளையாடினேன். அதனால் என்னால் சிறப்பாக ரன் குவிக்க முடிந்தது என்று கோலி ஏபிடி உடனான உரையாடல் குறித்து வெற்றிக்கு பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது பகிர்ந்துகொண்டார்.

மேலும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி பவுலர்களையும் கோலி பாராட்ட மறக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில் ; கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. வாஷிங்டன் சுந்தர் உட்பட அனைத்து பவுலர்களும் சிறப்பாக பந்துவீசினார் என்று பாராட்டி இருந்தார். அதோடு மட்டுமின்றி அறிமுக வீரர் இஷான் கிஷன் ஆட்டம் அற்புதமாக இருந்ததாகவும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement