செகன்ட் இன்னிங்சில் இவரே இந்திய அணியின் சிறந்த பவுலர் – விராட் கோலி மகிழ்ச்சி

kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND

- Advertisement -

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வானார். ரோஹித் முதல் இன்னிங்சில் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஷமி என அனைவரும் கலக்கினார்கள். ஷமி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய விராட் கோலி அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்கள் என்று கூறினார். இருப்பினும் அவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியையும் அவர் பாராட்டத் தவறவில்லை. ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இரண்டாவது இன்னிங்ஸின் போது முகமது ஷமி தேவையான விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார்.

Shami

அதுவும் வெறும் 10.5 ஓவர்கள் வீசிய முகமது ஷமி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 4 விக்கெட்டுகள் போல்ட் மூலம் வந்தவையாகும் எனவே இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷமியை இரண்டாவது இன்னிங்சில் எப்போதும் ஷமி சிறப்பாக பந்து வீசுகிறார் இந்தப் போட்டியிலும் அவர் சிறப்பான பந்துவீச்சை எங்கள் அணிக்கு அளித்தார் என்று ஷமி குறித்து கோலி பெருமையாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement