நான் நெனச்சது ஒன்னு. ஆனா நடந்தது ஒன்னு. வெற்றி குறித்து பேசிய கோலி – விவரம் இதோ

Kohli

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அதிகபட்சமாக அரைசதம் அடித்தனர்.

Rahul

அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக சைனி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய இந்தியன் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த புத்தாண்டை சிறப்பாக துவங்கி உள்ளோம், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் 200 ரன்களுக்கு மேல் அடித்ததால் அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. மிடில் ஆடர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சோதனையை தந்தாலும் மனிஷ் பாண்டே மற்றும் ஷர்துல் தாகூர் இறுதியில் சிறப்பாக விளையாடியது இந்திய அணிக்கு உதவியது.

saini

சீனியர் வீரர்கள் சரியாக ஆடாத போது இளம் வீரர்கள் இதுபோன்று ஒன்றிணைந்து விளையாடுவது அவசியம். இன்று இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இந்திய அணி இந்த போட்டியில் 180 ரன்களை அடிக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இறுதியில் மனிஷ் பாண்டே மற்றும் ஷர்துல் தாகூர்அதிரடியால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. என்று இந்திய அணியின் கேப்டன் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -