சச்சின் கூறிய இந்த அறிவுரைதான் பிங்க் பந்தில் நான் சதமடிக்க காரணம் – விராட் கோலி

Sachin

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் முதன்முறையாக பிங்க் பந்தில் ஆடினர். இந்த போட்டியில் பிங்க் பந்தின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

Kohli-1

அதனைப் போன்றே இந்த பிங்க் பந்தில் நல்ல வேகமும் அதிக அளவு ஸ்விங் மற்றும் பவுன்சும் இருந்தது. குறிப்பாக இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, உமேஷ் மற்றும் ஷமி ஆகியோரின் பந்து வீச்சில் அனல் பறந்தது மேலும் அவர்களின் பந்து வீச்சை தாங்க முடியாமல் பங்களாதேஷ் அணி வீரர்கள் பலத்த அடி வாங்கினார்கள்.

ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி திறம்பட செயல்பட்டு சதத்தை அடித்து பல சாதனைகள் படைத்தார். இந்நிலையில் தான் சதமடித்ததற்கு காரணம் சச்சின் கூறிய அறிவுரை என்று கூறியுள்ளார். அதன்படி கோலி கூறுகையில் : நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் முன் சச்சினுடன் பேசினேன் அவர் கொடுத்த ஆலோசனை எனக்கு போட்டியில் மிகவும் உதவியது.

Kohli-2

அதன்படி அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிங்க் பந்தை பொருத்தமட்டில் முதல் செஷனை போல கருதி இரண்டாவது செக்ஷனிலும் விளையாட வேண்டும் ஏனெனில் நேரம் ஆக ஆக பிங்க் பந்தில் ஸ்விங் ஆகும் என்று சச்சின் கூறினார். அதே போல தான் போட்டியிலும் பந்தின் செயல்பாடு இருந்தது அதற்கேற்றார் போல் நான் சுதாரித்து ஆடியதால் சதம் அடிக்க முடிந்தது என்று கோலி கூறினார்.

- Advertisement -