என்னதான் நான் 70 ரன்கள் அடித்தாலும் இவர்களே வெற்றிக்கு காரணம் – பாராட்டிய கோலி

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது. துவக்க வீரரான ரோகித் சர்மா 34 பந்துகளில் 71 ரன்களையும், ராகுல் 56 பந்துகளில் 91 ரன்கள் குவித்தனர்

அதன் பிறகு இந்திய அணி கேப்டன் கோலி வழக்கத்தைவிட மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளை சந்தித்த கோலி 70 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். கோலியின் இந்த வெறித்தனமான ஆட்டம் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் என்னுடைய பங்களிப்பை நான் அளிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரை நான் சிறப்பாக ஆட காரணம் யாதெனில் போட்டி துவங்கியதிலிருந்து ராகுல் மற்றும் ரோஹித் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் பேட்டிங் என்பதால் இன்றைய போட்டியில் அழுத்தம் இருக்கும் என்று உணர்ந்தோம். ஆனால் அவர்கள் இருவரும் மும்பை மைதானத்தை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.

ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் உலக கோப்பையின் போது எல்லைகள் மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் இது போன்று நாங்கள் அடித்து ஆடினால் அங்கு சென்று ஆடுவதற்கு அது உத்வேகத்தை அளிக்கும். மேலும் என்னுடைய வேகமான ஆட்டத்திற்கும் ராகுலே காரணம் அவர் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாகவே என்னால் அதிரடியாக ஆட முடிந்தது. மொத்தத்தில் இந்த போட்டியில் எங்களது செயல்பாடு திருப்தி அளிக்கிறது என்று கோலி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement