Virat Kohli : ரோஹித், தவான் பயிற்சி போட்டியில் சரியாக விளையாடாததை பற்றி எனக்கு கவலை இல்லை – கோலி

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

kohli
- Advertisement -

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா 19 ரன்களிலும் தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றினர்.

- Advertisement -

அடுத்து வந்த விராத் கோலி 47 ரன்கள் அடித்து ஓரளவுக்கு ஆறுதல் அளித்தார். அதன் பின்னர் ராகுல் சிறப்பாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இந்த பயிற்சி போட்டியில் விஜய்சங்கர் 2 ரன்கள் எடுத்து சோபிக்க தவறினார். பின்னர் தோனி அதிரடியாக ஆடி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தோனி 99 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 359 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பயிற்சிப் போட்டியில் தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் குறித்து பேசியதாவது : இந்த பயிற்சி போட்டியில் தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்பாக விளையாடாதது குறித்து எனக்கு எந்த வருத்தமோ கவலையோ எதுவும் இல்லை.

rohith

ஏனெனில் ஒவ்வொரு ஐசிசி தொடரின் போதும் அவர்கள் இருவரும் சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளனர். அதைப் போன்று தற்போது துவங்க உள்ள இந்த உலக கோப்பை தொடரிலும் சிறப்பான துவக்கத்தை அளித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தருவார்கள். எனவே அவர்கள் இருவரது ஆட்டம் குறித்து எந்த கவலையும் எனக்கு இல்லை என்று கோலி கூறினார்.

Advertisement