வலைப்பயிற்சியில் 3 மணிநேரம் பேட்டிங் செய்ஞ்சா மட்டும் போதாது. கரெக்ட்டா பண்ணனும் – இந்திய வீரரை குத்திக்காட்டிய கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி சமீபகாலமாக சமூக வலை தளங்களில் பல வீரர்களுடன் உரையாடி வருகிறார் . குறிப்பாக அவர் பேசும்போது தான் எப்படி பேட்டிங் பிடிப்பது என்றும் எவ்வாறு இலக்கை துரத்துவது என்றும் கிரிக்கெட் சார்ந்த பல விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வங்கதேச வீரர் தமீம் இக்பால்-உடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய பேட்டிங் பற்றி நிறைய பேசினார்.

Kohli-1

இதுகுறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட்டில் ஸ்டேன்ஸ் என்பது மிகச் சிறந்த கலையாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி உதவும். பல வீரர்கள் ஒரே நேர்கோட்டில் நின்று சரியாக ஆடுவதை விரும்புவார்கள். உதாரணமாக சச்சின் டெண்டுல்கரை எடுத்துக்கொண்டால் டெக்னிக்கலாக அவர் மிகவும் வலிமை வாய்ந்தவர். ஒரே நேர்கோட்டில் நின்று சரியாக ஆடுவது அவருக்கு கைகொடுத்தது.

ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஆட்டத்திற்கு ஏற்ப, ஆடுகளத்திற்கு ஏற்ப, பந்துவீச்சாளருக்கு ஏற்ப எனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டே இருப்பேன். நகர்ந்து ஆடுவேன். புதுவிதமான ஷாட்களை முயற்சி செய்வேன். நாம் புதிய முயற்சி செய்தால் தான் அதனை துல்லியமாக்க முடியும். அதனை வலைப்பயிற்சியில் செய்து சரியாக ஆடுகளத்தில் செய்ய முடியும்.

Practice

அதனை அழுத்தமான நேரத்தில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். அப்போதுதான் நமது தன்னம்பிக்கை கூடும். அதே நேரத்தில் வலைப்பயிற்சியில் நம் தவறுகளை நாம் சரி செய்து கொள்ள வேண்டும் . தவறுகளை சரிசெய்த பின்னர் அதற்கு அடுத்து 10 நிமிடம் கூட நான் அங்கு நிற்க மாட்டேன். அதுவும் திறன் சார்ந்ததுதான். எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதை நாம் திட்டமிடவேண்டும் அதுவே நம்மை ஊக்குவிக்கும். நம்மை பதப்படுத்தும்.

- Advertisement -

எதிரணி வீரர்கள் நம்மை வொர்க் அவுட் செய்து நமக்கான பந்துகளை வீசுவார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு முன்னதாக நாம் இருக்க வேண்டும். உதாரணமாக புஜாராவை எடுத்துக் கொண்டால் மிக அதிக நேரம் பயிற்சி செய்வார். வலைப்பயிற்சியில் மட்டும் 3 மணிநேரம் செலவிடுவார். அது அவருக்கு செட் ஆகிறது போல் இருக்கிறது.

pujara

ஆனால் அவ்வளவு அதிக நேரம் வலைபயிற்சி செய்து கிரிக்கெட் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நம்மை பல நேரம் சிக்கலுக்கு தள்ளிவிடும் என்று புஜாராவைவை சூசகமாக சீண்டி உள்ளார் விராட் கோலி. ஏற்கனவே புஜாரா மிகவும் பொறுமையாக ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டையும் புஜாரா மீது கோலி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.