எல்லாமே கரெக்ட்டா தான் பண்ணோம். ஆனா இதுல மட்டும் கொஞ்சம் சொதப்பிடுச்சி – கோலி ஓபன் டாக்

Kohli
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முன்ரோ 59 ரன்களும், ராஸ் டைலர் 54 ரன்களும் கேப்டன் வில்லியம்சன் 51 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

Williamson

- Advertisement -

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா 7 ரன்களில் வெளியேற ராகுல் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர். ராகுல் 56 ரன்களிலும் கோலி 45 ரன்களில் வெளியேற அதன் பின்னர் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : நாங்கள் போட்டியை நன்றாக அனுபவித்து விளையாடுகிறோம். நியூசிலாந்து வந்தவுடன் இரண்டு நாட்களில் முதல் போட்டியில் விளையாடி உள்ளோம். எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இங்கு சிறப்பாக இருந்தது 80% இந்திய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்து நல்ல சூழலை அமைத்துக் கொடுத்தனர். மேலும் 200க்கும் மேற்பட்ட ஒரு இலக்கைத் துரத்தும் போது இது போன்ற ரசிகர்களின் ஆதரவு உற்சாகத்தை அளிக்கும் என்று கோலி கூறினார்.

பயணம் காரணமாக உள்ள சிக்கல் குறித்து பேச மாட்டோம் மேலும் காரணம் கூற நாங்கள் விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்றது சிறப்பாக இருந்தது அந்தத் தொடரை வென்ற நம்பிக்கையோடு இங்கு வந்து விளையாடுகிறோம். பந்துவீசும் போது மிடில் ஓவர்களில் சிறப்பாக நாங்கள் செயல்பட்டோம். அதனால்தான் 210 ரன்களுக்குள் நியூசிலாந்தை கட்டுப்படுத்த முடிந்தது.

பீல்டிங்கில் ஒன்று தான் நாங்கள் சரி செய்ய வேண்டிய விடயம் என்று நான் நினைக்கிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இன்றைய போட்டியில் மனிஷ் பாண்டே மற்றும் சாஹல் போன்ற வீரர்கள் பீல்டிங்கில் சற்று சுமாராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement