பிங்க் பந்தில் இது ஒரு மைனஸ் இதனை நான் பயிற்சயில் அனுபவித்தேன் – கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் இரண்டாவது போட்டி நாளை மதியம் ஒரு மணி அளவில் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து அதிக எதிர்பார்ப்பு எழுந்து வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

shami

- Advertisement -

அதில் கோலி அனைவருக்கும் தெரியாத ஒரு விடயத்தை தற்போது பகிர்ந்துள்ளார். அதன்படி பிங்க் நிற பந்து அதிகம் ஸ்விங் ஆகும் என்றும் அதிகம் வேகமாகவும் வருகிறது எனவே இது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக விடயமாகவும், பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக விடயமாகும் பார்க்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் பகிர்ந்த விடையம் இந்நிலையில் கோலி குறிப்பிட்டதாவது :

வழக்கமாக சிகப்பு நிற பந்து டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஆனால் பகலிரவு போட்டியில் இரவு நேரத்தில் பிங்க் நிறமே தெளிவாக தெரியும் என்பதால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய அணி பேட்டிங், பீல்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் பிங்க் பந்தினை வைத்து பயிற்சி செய்தோம். அதில் ஒரு விடயம் தற்போது எனக்கு தெளிவாகியுள்ளது.

ind

அதன்படி பிங்க் பந்தை பிடிக்கும் போது அதிக கனமாக இருப்பது போல் உணர்கிறோம். அதனால் ஸ்லிப் பகுதியில் கேட்ச் பிடிப்பதில் கொஞ்சம் தவறு நடக்கும் மேலும் பவுண்டரி லைனில் இருந்து பந்தை த்ரோ செய்வதும் சற்று கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சிகப்பு பந்தை விட இந்த பந்தில் எடை அதிகம் இல்லை என்றாலும் கனமாக இருப்பது போல் உணர்கிறோம்.

ind 1

மேலும் பிங்க் பந்து தனது பொலிவை இழக்க நீண்ட நேரம் ஆகும் அதுமட்டுமின்றி பனிபொழிவின் போது எவ்வாறு இருக்கும் என்பது தற்போது வரை எங்களுக்கு தெரியவில்லை. மேலும் இந்தப் பந்து பீல்டிங் செய்யும்போது வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே முறையான பயிற்சி எடுத்து வருகிறோம் பிங்க் பந்தில் கடினத்தன்மை நிச்சயம் ஒரு வித்தியாசம் தான் என்று நான் கருதுகிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement