தோனியை கடந்து முன்னேறி செல்ல இது ஒரு அருமையான வாய்ப்பு – விராட் கோலி

Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று முதலாவது டி20 போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

Kohli

- Advertisement -

இந்தத் தொடர் முழுவதும் டோனிக்கு பதிலாக பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனவே அவரின் மீது உள்ள எதிர்பார்ப்பும் இந்த தொடரில் ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது. இந்நிலையில் தோனியின் இடத்தை அவ்வளவு சுலபமாக அவரால் நிரப்ப முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி இன்றைய போட்டிக்குமுன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி இந்த தொடரில் பங்கு பெறாமல் இருப்பதால் இந்திய அணியின் இளம் வீரர்கள் அவரின் இடத்தை நிரப்ப தற்போது ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக பண்ட் தனது முன்னேற்றத்தை அடைய இந்த தொடர் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Pant

மேலும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதால் அதனை சரியாக பயன்படுத்தி உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்ள இந்த தொடர் உங்களுக்கு சாதகமாக அமையும். எனவே உங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடுங்கள் என்று இளம் வீரர்களுக்கு ஆலோசனை கூறினார் மேலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அணியில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement