ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஹர்டிக் பாண்டியாவை சேக்காததுக்கு காரணம் இதுதான் – கோலி ஓபன் டாக்

Pandya
Pandya IND
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி முடித்து உள்ளது. இதில் ஒரு நாள் தொடரை இழந்த இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா இடம் பெறுவாரா ? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்த கேள்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : பாண்டியாவால் தற்போது முழுவீச்சில் பவுலிங் செய்ய இயலவில்லை. அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சவால் சற்று வித்தியாசமானது.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் பௌலிங் வீசுவதாக இருந்தால்தான் அணியில் இடம்பெற சரியானதாக இருக்கும். தற்போது பாண்டியா பவுலிங் செய்வது இல்லை என்பதால் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற மாட்டார். தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஆட்டங்களில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அவர் சிறப்பாக செயலாற்றினார்.

pandya

தற்போது காயம் காரணமாக பேட்டிங் மட்டும் செய்து வருவதால் இந்த டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறமாட்டார் என்று கோலி தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாடும் நிலையில் தற்போது பாண்டியா இருக்கிறார். அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெற பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை பாண்டியா உணர்ந்திருப்பார் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

pandya 1

ஏற்கனவே டி20 தொடர் முடிந்தவுடன் பேசிய பாண்டியா கூறுகையில் : இந்த டெஸ்ட் தொடரில் தான் பங்கேற்க மாட்டேன் என்றும் இந்த இடைவெளியில் நான்கு மாதங்களாக பிரிந்துள்ள என் குடும்பத்தையும் எனது குழந்தையும் பார்க்க ஆவலாக உள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement