உலகக்கோப்பையில் ரோகித்துடன் இவரே துவக்க வீரராக களம் இறங்குவார் – கோலி கொடுத்த ஹின்ட்

Kohli-3

இந்திய அணிக்கு கடந்த சில வருடங்களாகவே ரோஹித் மற்றும் தவான் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்து வருகின்றனர். கிட்டத்தட்ட சச்சின் கங்குலி எவ்வாறு ஒரு லெப்ட் அண்ட் ரைட் காம்பினேஷனாக இருந்ததோ அதனைப் போன்றே இவர்கள் இருவரும் தொடர்ச்சியான சிறப்பான துவக்கத்தை அளித்து வந்தனர்.

rohith 1

ஆனால் கடந்த சில தொடர்களாகவே தவான் காயம் காரணமாக அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு பதில் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தற்போது டி20 போட்டிகளில் தவானின் ஸ்ட்ரைக்ரேட் குறைவாகி வருகிறது. ஆனால் ராகுல் துவக்க வீரராக மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார்.

இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த தவான் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அணிக்கு மீண்டும் திரும்ப ரோகித் ஓய்வு காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார். இதனால் மீண்டும் ராகுல் தவானுடன் சிறப்பான துவக்கத்தை அளித்து வருகிறார். இந்த தொடரிலும் ராகுலின் சிறப்பான ஆட்டம் தொடர உலகக் கோப்பையில் இந்த மூவரில் யார் சரியான துவக்க ஜோடியாக விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Rahul

அதுகுறித்து தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலியும் ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தவான், ரோகித், ராகுல் ஆகிய மூன்று பேருமே சிறப்பான வீரர்கள் குறிப்பாக ரோகித் சர்மா தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் உலக கோப்பையில் துவக்க வீரர் என்பது உறுதி. அதே வகையில் தற்போது அவருடன் ஆடும் வீரர் ஒவ்வொரு ஆட்டத்திலும் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கே இடம் என்பதை அனைவரும் அறிவர்.

- Advertisement -

rahul

இந்த விடயத்தை தவானும், ராகுலும் நன்கு அறிவார்கள். எனவே ஒருவருக்காக ஒருவரைப் பற்றி ரசிகர்கள் தவறாக பேச வேண்டாம். யாரை உலக கோப்பை தொடரில் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று தேர்வுக்குழு ஏற்கனவே முடிவு செய்யும் என்றும் அதன்படி தேர்வு இருக்கும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.