இதை மட்டும் செய்ஞ்சா போதும் டி20 உலகக்கோப்பையில் நடராஜன் விளையாடுவார் – விராட் கோலி உறுதி

Nattu-1
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் பெரிய அளவில் கிரிக்கெட் அனுபவம் இல்லை என்றாலும் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தனது அற்புதமான பந்து வீச்சினால் உலகின் பல முன்னணி வீரர்களை அச்சுறுத்தினார். மேலும் தொடர்ச்சியாக விக்கெட் வேட்டை நிகழ்த்திய அவர் ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியிலும் தேர்வானார்.

Nattu

- Advertisement -

அந்த தொடரின் டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமான நடராஜன் சிறப்பாக பந்துவீசி தனது திறமையை நிரூபித்தார். அதன் காரணமாக அவருக்கு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும் ஒருநாள் தொடருக்கான அணியிலும் நடராஜன் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெறுவார் என்று தற்போது கோலி கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஆட்டத்தில் நடராஜன் தனது பிட்னஸை நிரூபித்து விளையாடினால் டி20 உலக கோப்பை தொடரில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்று கூறியுள்ளா. மேலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவருக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கோலி கூறியுள்ளார்.

nattu 1

மேலும் இனி வரும் போட்டிகள் அவருக்கு வைக்கப்படும் பலப்பரீட்சை தான் எனக் கூறியுள்ளார். நடராஜன் இந்த இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் தனது பிட்னஸை நிரூபித்தால் நிச்சயம் அவர் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று நடராஜனுக்கு ஆதரவாக கோலி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியபோது விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணியில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ.

Nattu

அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று சிறப்பாக பந்துவீசுவாராயின் நிச்சயம் டி20 உலக கோப்பையில் நடராஜன் இடம் பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement