சர்வதேச பவுலர்களை அசால்டாக அடிக்கும் உன்னுடைய தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு – இளம் வீரரை புகழ்ந்த கோலி

Kohli-1

இந்திய அணியின் கேப்டனாக கங்குலி, தோனி ஆகியோரின் வரிசையில் கோலியும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பும், ஆதரவும் அளித்து வரும் கோலி வெளிநாட்டு தொடர்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி அணியையும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

Ind-lose

அணியில் இருக்கும் ஒவ்வொரு இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் கோலி அவர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறார். தற்போது கடந்த நான்கு மாதங்களாக போட்டி எதிலும் பங்கேற்காத கேப்டன் கோலி சமூகவலைதளத்தில் அவ்வப்போது ரசிகர்களுக்காக சமூகவலைத்தளம் மூலம் கிரிக்கெட் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது பிசிசிஐ சார்பாக நடத்தப்பட்ட வீடியோ சேட்டில் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான மாயங்க் அகர்வாலுடன் பேசிய கோலி அவரை பற்றி புகழ்ந்து பேசினார். அதாவது நான் உன்னை முன்பே ஆர்சிபி அணியில் பார்த்திருக்கிறேன். அப்போதே நீ சர்வதேச பவுலர்களை எதிர்த்து கொஞ்சமும் பயப்படாமல் துணிச்சலாக ஆடினாய்.

agarwal 1

முதல் தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதால் நீ அடித்த ரன்களை விட உன்னுடைய கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்தது. உன்னுடைய பயமற்ற துணிச்சலான ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று புகழ்ந்துள்ளார். மேலும் ஒவ்வொரு போட்டியை சூழ்நிலையையும் ஒரு வீரர் எப்படி அனுகுகிறார் என்பதே முக்கியம்.

- Advertisement -

அந்த வகையில் துவக்க வீரராக நீ இறங்கியபோது விகாரியை உன்னுடன் இருக்க கேட்டுக்கொண்டேன். அவரும் எதுவும் யோசிக்காமல் சட்டென்று ஓகே என்று சொன்னார். அவரின் அந்த செயலும் எனக்கு ரொம்ப பிடித்தது என்று குறிப்பிட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த மெல்போர்ன் டெஸ்டில் களமிறங்கிய அகர்வால் அந்த டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

Agarwal 1

அதன் பின்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அனைத்து தொடர்களிலும் பங்கேற்றார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அகர்வால் 3 சதங்கள் மற்றும் 3 அரைச் சதங்களுடன் 872 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.