ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுக்கு இந்திய வீரர்களான இவர்களே தகுதியானவர்கள் – கோலி அதிருப்தி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று புனே மைதானத்தில் முடிவடைந்தது. நேற்றைய பரபரப்பான மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்தத் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

trophy

- Advertisement -

இந்திய அணி சார்பாக தவான் 67 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களையும், பண்ட் 78 ரன்கள் குவித்து அசத்தினார்கள். அதன்பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தாலும் மலான் மற்றும் சாம் கரண் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் வந்தது. வெற்றிக்கு முக்கியமான அந்த கடைசி வரை தமிழக வீரரான நடராஜன் வீசினார்.

அந்த ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே மார்க் வுட் ரன் அவுட்டாக போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. எனினும் மீதமுள்ள 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் மட்டுமே சென்றதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடர், டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என அனைத்தையும் இந்திய அணி தன் வசப்படுத்தியது.

bhuvi

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கோலி கூறுகையில் : தரம் வாய்ந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி சிறப்பான ஒன்று. சாம் கரன் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை இறுதிவரை தக்க வைத்தார். இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு அழுத்தத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி : இந்த போட்டியில் ஷர்துல் தாகூருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்காததும், புவனேஷ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருது கிடைக்காதது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த போட்டியில் தாகூர் பேட்டிங்கில் 30 ரன்கள் அடித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் 4 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதை தவிர இந்த தொடர் முழுவதும் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் குறைவாக ரன்கள் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருது கிடைக்கவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

thakur 1

ஆனாலும் ஒரு கட்டத்தில் போட்டியை விட்டு வெளியேறி விடும் என்று இருந்த நிலையில் தனி ஒரு ஆளாக களத்தில் நின்று இறுதிவரை போராடிய சாம் கரண் 95 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். இதனால் சாம் கரனுக்கு மேன் ஆப் தி மேட்ச் வழங்கப்பட்டது சரி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் தொடர் நாயகன் விருது இந்த தொடர் முழுவதும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement