இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்கிறது, கொல்கத்தா அணிக்கெதிரான படுதோல்வி – விராட் கோலி வேதனை

kohli 3
- Advertisement -

நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 31-வது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் முடிவில் 92 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியானது 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

RCBvsKKR

- Advertisement -

இந்த போட்டியில் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் வெளிப்படுத்திய படுமோசமான ஆட்டம் காரணமாகவே இந்த மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெங்களூரு அணியின் முன்னணி வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என மூவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : இந்த மைதானத்தில் பார்ட்னர்ஷிப் என்பது மிகவும் முக்கியம். போட்டி துவங்கி இவ்வளவு சீக்கிரமே இன்று டியூ வரும் என்பதை நாங்கள் கனிக்கவில்லை. இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்வதற்கு சரியாக இருக்கும் என்று நினைத்தோம்.

varun

ஒரு கட்டத்தில் 41 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலைமையில் இருந்து அடுத்த 20 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை நாங்கள் இழுந்தோம். அதுபோன்ற சூழ்நிலையில் இருந்து மீண்டும் கம்பேக் கொடுப்பது என்பது எளிது கிடையாது. அந்த இடத்தில் தான் எங்களது மொத்த அணியும் கொலாப்ஸ்ஸை சந்தித்தது.

இது எங்கள் அணியை மீண்டும் தட்டி எழுப்பிய போட்டி. ஏனெனில் இந்த இரண்டாம் பாதியின் முதல் போட்டியிலேயே நாங்கள் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்து உள்ளதால் அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட இந்த தோல்வி எங்களை நியாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் என்று தோல்வி குறித்து விராட் கோலி குறிப்பிடத்தக்கது.

Advertisement