3 ஆவது டி20 போட்டி : நாங்கள் செய்த இந்த தவறு தான் எங்களின் மோசமான தோல்விக்கு காரணம் – கோலி வருத்தம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார்.

INDvsENG

- Advertisement -

அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக துவக்க வீரர் பர்ட்னர் 83 ரன்களும், பேர்ஸ்டோ 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியில் கேப்டன் கோலி கூறியதாவது : இரண்டாவது பாதியில் ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்த நினைத்து அதன்படி பீல்டிங்கில் தீவிரம் காட்ட நினைத்து நாங்கள் அதில் தோற்று விட்டோம்.

kohli

எங்களது பாடி லாங்குவேஜ் சரி இல்லை என நான் நினைக்கிறேன். டாஸினை இழந்த பிறகு அதற்கேற்றபடி நாம் விளையாடி வேண்டியது அவசியம். ஆனால் புது பந்தில் விளையாடுவது சற்று சவாலான காரியம். பேட்டிங்கில் பெரிய பாட்னர்ஷிப்பை அமைக்க நாங்கள் தவறிவிட்டோம். ஒரே ஒரு சின்ன பார்ட்னர்ஷிப் மட்டும் தான் அமைக்க முடிந்தது.

Sundar-1

இங்கிலாந்து அணி வீரர்கள் மீண்டும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு எங்களை வீழ்த்தி விட்டனர் என்று இந்த போட்டியில் தோல்வி குறித்து கேப்டன் கோலி தோல்வி குறித்து வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement